நானி-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தசரா' படத்தின் புதிய அப்டேட்...
|‘தசரா’ திரைப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகராக வலம் வரும் நானி, தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் தசரா திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ஓரி வாரி' பாடல் வருகிற பிப்ரவரி 13-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
This will be on loop #DasaraSecondSingle pic.twitter.com/WvvnmWlnrI
— Nani (@NameisNani) February 9, 2023 ">Also Read: